Friday, 13 October 2023

சிக்கன் கோலா உருண்டை குழம்பு – Chicken Kola Kulambu

சிக்கன் கோலா உருண்டை குழம்பு – Chicken Kola Kulambu

Image result for chicken kola urundai kuzhambu

Ingredients

  • மிளகாய் தூள் -1 ஸ்பூன்.
  • மல்லி தூள் -1 ஸ்பூன்.
  • பட்டை -2.
  • கிராம்பு -2
  • எண்ணெய் -தேவையான அளவு
  • உப்பு -தேவையான அளவு
  • பெரிய வெங்காயம் -1
  • தக்காளி -1

Method

Step 1

குழம்புக்கு அரைக்க வேண்டிய பொருட்கள்; தேங்காய் துருவல்-3 ஸ்பூன் சோம்பு -1 டீஸ்பூன் கசகசா -1 டீஸ்பூன் பூண்டு -சிறிது அளவு இஞ்சி-சிறிது அளவு

Step 2

உருண்டைக்கு அரைக்க வேண்டிய பொருட்கள்: சிக்கன்( boneless )-கால் கிலோ வெங்காயம் ( medium )-1. பச்சை மிளகாய் -3 சோம்பு -1 ஸ்பூன் மிளகு -1 ஸ்பூன் பொட்டுக் கடலை -2 ஸ்பூன் தேங்காய் துருவல் -2 ஸ்பூன் உப்பு -தேவையான அளவு

Step 3

முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தேங்காய் துருவல்,சோம்பு ,கசகசா,இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து தனியாக வைக்கவும்.பின்பு உருண்டைக்கு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

Step 4

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு போட்டு தாளித்த பின்பு வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் மிளகாய் தூள் ,மல்லி தூள் ,மற்றும் குழம்புக்கு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி கொதிக்க விடவும்.குழம்பு கொதித்தா பின்பு அதில் உருண்டைக்கு அரைத்து வைத்ததை சிறு சிறு உருண்டையாக உருட்டி குழம்பில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.இப்போது சிக்கன் உருண்டை குழம்பு தயார்.

சிக்கன் கருவேப்பிலை ப்ரை – Chicken Curry Leaves Fry

சிக்கன் கருவேப்பிலை ப்ரை – Chicken Curry Leaves Fry


Ingredients

  • சிக்கன்- அரை கிலோ
  • கருவேப்பிலை -2 கொத்து
  • வர மிளகாய் - 5.
  • மிளகு -1 ஸ்பூன்
  • கடலை பருப்பு -1 ஸ்பூன்
  • இஞ்சி -சிறிது அளவு.
  • பூண்டு - சிறிது அளவு.
  • உப்பு -தேவையான அளவு.
  • எண்ணெய் -தேவையான அளவு.
  • கொத்தமல்லி தூள் -1 ஸ்பூன்.

Method

Step 1

முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு சொட்டு விட்டு வரமிளகாய்,மிளகு,கடலை பருப்பு,கருவேப்பிலை,இஞ்சி மற்றும் பூண்டு வறுத்துக் கொள்ளவும்.

Step 2

வருத்த பின்பு அதை சிறிது அளவு அரைத்து வைத்துக் கொள்ளவும்.அரைத்து வைத்த கலவையில் கொத்தமல்லி தூள்,சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த சிக்கன் மசாலைவை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.(விரும்பினால் பொரிக்கும் போது சிறிது அளவு கருவேப்பிலை போட்டு பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும் ).

Thursday, 13 October 2016

முஷ்ரூம் கிரேவி

முஷ்ரூம் கிரேவி – Mushroom Gravy

Image result for mushroom gravy

Ingredients

  • மஷ்ரூம் -கால் கிலோ
  • எண்ணெய் -தேவையான அளவு
  • உப்பு -தேவையான அளவு
  • வெங்காயம் -1
  • ஏலக்காய் -3
  • மிளகு -1 டீஸ்பூன்
  • பூண்டு -3 பல்
  • இஞ்சி -சிறிது அளவு
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் -கால் கப்
  • கசகசா - அரை டீஸ்பூன்
  • பட்டை -2
  • கிராம்பு -3
  • வர மிளகாய் -3
  • கொத்தமல்லி -1 ஸ்பூன்
  • சீரகம் -1 டீஸ்பூன்

Method

Step 1

அரைக்க வேண்டிய பொருட்கள்: வெங்காயம் -1 ஏலக்காய் -3 மிளகு -1 டீஸ்பூன் பூண்டு -3 பல் இஞ்சி -சிறிது அளவு சோம்பு - 1 டீஸ்பூன் தேங்காய் துருவல் -கால் கப் கசகசா - அரை டீஸ்பூன் பட்டை -2 கிராம்பு -3 வர மிளகாய் -3 கொத்தமல்லி -1 ஸ்பூன் சீரகம் -1 டீஸ்பூன்

Step 2

முதலில் மஷ்ரூம் ,வெங்காயம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

Step 3

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்த மசாலாவை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .பின்பு அதில் மஷ்ரூம் மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.மஷ்ரூம் வதங்கிய பின்பு இறக்கவும் .சுவையான மஷ்ரூம் கிரேவி ரெடி.

சிக்கன் வடை – Chicken Vada

சிக்கன் வடை – Chicken Vada

Image result for chicken vada

Ingredients

  • சிக்கன் (boneless ) -150 கிராம்
  • சின்ன வெங்காயம் -50 கிராம்
  • கரம் மசாலா -1 ஸ்பூன்
  • இஞ்சி ,பூண்டு விழுது -அரை ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • பிரட் தூள் -150 கிராம்
  • முட்டை -1
  • எண்ணெய் -தேவையான அளவு

Method

Step 1

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்பு சிக்கனை மிக்ஸ்யில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.அரைத்து வைத்த பின்பு சிக்கனுடன் ,கரம் மசாலா தூள் ,இஞ்சி ,பூண்டு விழுது,வெங்காயம் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

Step 2

பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதில் உள்ள வேளை கருவை மற்றும் ஊற்றி கொள்ளவும் .பின்பு ஒரு பிளேட்டில் பிரட் தூளை வைத்து கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் பிராட்டிய பின்பு அதை பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.இப்போது சிக்கன் வடை ரெடி .

In English

Items required
1. Boneless Chicken – 150 gm
2. Small Onions – 50 gm
3. Garam Masala – 1 Spoon
4. Ginger Garlic Paste – 1/2 Spoon
5. Salt – as required
6. Bread Crumbs – 150 gm
7. Egg – 1 nos.
8. Oil – as required
Preparation Guide
Chop the small onions in to pieces. Grind it along with Chicken to make it as paste. With the paste, now add garam masala, chopped onions, ginger garlic paste and salt. Mix it throughly so that the masala mixes well with chicken and other ingredients. Once mixed throughly make the paste in to your desired shape like balls or like vada shape.
In a vessel, break the egg and use only the white part in the egg (Don’t add the yellow from Egg). Add the bread crumbs along with white part of egg in vessel and mix it throughly. Pour oil in Kadai as required. Dip the vada or the shape you made with egg bread crumb mix and deep fry in the Kadai pan to make tasty chicken vada.

சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

Ingredients

  • சிக்கன் -அரை கிலோ
  • சீரக சம்பா அரிசி -1 கப்
  • பெரிய வெங்காயம்-1
  • தக்காளி -1
  • கொத்தமல்லி தழை -1 கப்
  • பச்சை மிளகாய் -2
  • மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
  • மிளகாய் தூள் -1 டேபிள் ஸ்பூன்
  • மல்லி தூள் -2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 ஸ்பூன்
  • பட்டை -2
  • கிராம்பு -2
  • ஏலக்காய் -2
  • பிரியாணி இலை-1

Method

Step 1

முதலில் வெங்காயத்தையும் மற்றும் தக்காளியையும் தனி தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.அரைத்து வைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி,கொத்தமல்லி தழை மற்றும் மஞ்சள் தூள்,உப்பு,மிளகாய் தூள்,மல்லி தூள்,தயிர்,இஞ்சி,பூண்டு பேஸ்ட் எல்லாவட்டரையும் சேர்த்து பிசைந்து அரைமணி நேரம் உற வைத்துக் கொள்ளவும்.

Step 2

பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பொருட்களை போட்டு எண்ணெய் சேர்த்து தாளித்த பின்பு அதில் உற வைத்த சிக்கனை போட்டு சிறிது நேரம் வேக விடவும்.வேக வைத்த பின்பு அதில் அரிசியையும் போட்டு கிளறி விட்டு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட்டு இரண்டு விசில் விட்டு பத்து நிமிடம் சிமிழ் வைத்து இறக்கவும்.சிக்கன் பிரியாணி ரெடி. குறிப்பு:(சீரக சம்பா அரிசி ஒரு கப் அரிசி வைத்தால் ஒன்றை கப் தண்ணீர் ஊற்றினால் போதும் அதிகம் தண்ணீர் ஊற்றினால் சாதம் குழைந்து விடும்.)

மட்டன் சுக்கா வறுவல் – Mutton Chukka Varuval

மட்டன் சுக்கா வறுவல் – Mutton Chukka Varuval

Image result for mutton chukka

Ingredients

  • மட்டன் -அரை கிலோ
  • வெங்காயம் -1
  • மிளகாய் தூள் -1 ஸ்பூன்
  • மல்லி தூள் -1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
  • மிளகு தூள் -2 ஸ்பூன்
  • இஞ்சி,பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு
  • கிராம்பு -2
  • பட்டை -2
  • பொட்டுக் கடலைமாவு -2 ஸ்பூன்( பொட்டுக் கடலையை மிக்ஸ்யில் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும் )
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்

Method

Step 1

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு குக்கரில் மட்டன் ,உப்பு,மஞ்சள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஏழு விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.

Step 2

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு ,மற்றும் சோம்பு போட்டு தாளிக்கவும் .தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.வெங்காயம் வதங்கிய பின்பு அதில் மிளகாய் தூள் ,மல்லி தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் போட்டு வதக்கவும்.

Step 3

வதக்கிய பின்பு அதில் வேக வைத்த மட்டன் துண்டுகளை போட்டு தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும்.மட்டனில் தண்ணீர் வற்றிய பின்பு அதில் பொட்டுக் கடலை மாவை போட்டு பச்சை வாசனை போகும் வரை கிளறி விட்டு இறக்கவும்.இதோ மட்டன் சுக்கா ரெடி .

இறால் தொக்கு – Prawns Thokku

இறால் தொக்கு – Prawns Thokku

Image result for eral thokku

Ingredients

  • இறால் -200 கிராம்
  • பெரிய வெங்காயம் -1
  • தக்காளி -1
  • பச்சை மிளகாய் -2
  • இஞ்சி ,பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
  • மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
  • மிளகாய் தூள் -1 1/2 டேபிள்ஸ்பூன்
  • மல்லித் தூள் -2 டேபிள்ஸ்பூன்
  • கொத்தமல்லி தலை -சிறிது அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு

Method

Step 1

முதலில் வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி ,பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு வெங்காயம் போட்டு வதக்கவும்.

Step 2

வதக்கிய பின்பு அடுப்பை மிதமான (low ) சூட்டில் வைத்த பின்பு கடவை தட்டு போட்டு மூடி இரண்டு நிமிடம் வேக விடவும்.பின்பு தட்டை எடுத்துவிட்டு அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,மல்லி தூள் ,இறால் மற்றும் உப்பு போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

Step 3

வதக்கிய பின்பு அதில் ஒரு குழி கராண்டி அளவு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு மூடியை போட்டு மூடி எண்ணெய் சுண்டி வரும் வரை வேக விட்டு இறக்கவும் .இப்போது இறால் தொக்கு ரெடி.