இறால் தொக்கு – Prawns Thokku
Ingredients
- இறால் -200 கிராம்
- பெரிய வெங்காயம் -1
- தக்காளி -1
- பச்சை மிளகாய் -2
- இஞ்சி ,பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
- மிளகாய் தூள் -1 1/2 டேபிள்ஸ்பூன்
- மல்லித் தூள் -2 டேபிள்ஸ்பூன்
- கொத்தமல்லி தலை -சிறிது அளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் -தேவையான அளவு
Method
Step 1
முதலில்
வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக்
கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி ,பூண்டு விழுதை
போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு வெங்காயம் போட்டு வதக்கவும்.
Step 2
வதக்கிய
பின்பு அடுப்பை மிதமான (low ) சூட்டில் வைத்த பின்பு கடவை தட்டு போட்டு
மூடி இரண்டு நிமிடம் வேக விடவும்.பின்பு தட்டை எடுத்துவிட்டு அதில் பச்சை
மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.வதக்கிய பின்பு
அதில் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,மல்லி தூள் ,இறால் மற்றும் உப்பு போட்டு
சிறிது நேரம் வதக்கவும்.
Step 3
வதக்கிய
பின்பு அதில் ஒரு குழி கராண்டி அளவு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு மூடியை
போட்டு மூடி எண்ணெய் சுண்டி வரும் வரை வேக விட்டு இறக்கவும் .இப்போது இறால்
தொக்கு ரெடி.
No comments:
Post a Comment