Thursday, 13 October 2016

இறால் புளிகுழம்பு – Prawns Curry

இறால் புளிகுழம்பு – Prawns Curry

Image result for iraal puli kulambu

இறால் புளிகுழம்பு  செய்முறை

Ingredients

  • இறால் -200 கிராம்
  • பெரிய வெங்காயம் -1
  • தக்காளி -1
  • பச்சை மிளகாய் -2
  • இஞ்சி ,பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
  • மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
  • மிளகாய் தூள் -1 1/2 டேபிள்ஸ்பூன்
  • மல்லித் தூள் -2 டேபிள்ஸ்பூன்
  • கொத்தமல்லி தலை -சிறிது அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு
  • புளி - எலுமிச்சை பழம் அளவு
  • கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
  • கருவேப்பில்லை - சிறுது

Method

Step 1

புளி - எலுமிச்சை பழம் அளவு - நன்கு தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து கொள்ளவும்.

Step 2

வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை, உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு வெடித்த பிறகு அதில் வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு அதில் இஞ்சி ,பூண்டு விழுது,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் போட்டு வதக்கவும்

Step 3

வதக்கிய பின்பு அதில் இறாலை போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மற்றும் புளி கரைசலையும் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கடாயை தட்டு போட்டு முடவும் பின்பு அடுப்பை மிதமான சூட்டில் ( sim )வைத்து குழம்பில் எண்ணெய் திரிந்து வரும் வரை வேக வைத்து இறக்கவும்.இறால் புளி குழம்பு ரெடி.

No comments:

Post a Comment