மட்டன் சுக்கா வறுவல் – Mutton Chukka Varuval
Ingredients
- மட்டன் -அரை கிலோ
- வெங்காயம் -1
- மிளகாய் தூள் -1 ஸ்பூன்
- மல்லி தூள் -1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
- மிளகு தூள் -2 ஸ்பூன்
- இஞ்சி,பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- எண்ணெய் -தேவையான அளவு
- கிராம்பு -2
- பட்டை -2
- பொட்டுக் கடலைமாவு -2 ஸ்பூன்( பொட்டுக் கடலையை மிக்ஸ்யில் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும் )
- சோம்பு - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
Method
Step 1
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு குக்கரில் மட்டன்
,உப்பு,மஞ்சள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஏழு விசில் வரும் வரை
வேக விட்டு இறக்கவும்.
Step 2
பின்பு
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு ,மற்றும் சோம்பு போட்டு
தாளிக்கவும் .தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு நன்கு
வதக்கவும்.வெங்காயம் வதங்கிய பின்பு அதில் மிளகாய் தூள் ,மல்லி தூள், கரம்
மசாலா மற்றும் மிளகுத் தூள் போட்டு வதக்கவும்.
Step 3
வதக்கிய
பின்பு அதில் வேக வைத்த மட்டன் துண்டுகளை போட்டு தண்ணீர் சுண்டும் வரை வேக
வைக்கவும்.மட்டனில் தண்ணீர் வற்றிய பின்பு அதில் பொட்டுக் கடலை மாவை
போட்டு பச்சை வாசனை போகும் வரை கிளறி விட்டு இறக்கவும்.இதோ மட்டன் சுக்கா
ரெடி .
No comments:
Post a Comment