லெமன் பருப்பு ரசம் – Lemon Dhaal Rasam
Ingredients
- லெமன் -2
- கடுகு -1 டேபிள்ஸ்பூன்
- சீரகம் -1 டேபிள்ஸ்பூன்
- சின்ன பூண்டு -5 பல்
- இஞ்சி –சிறிய துண்டு
- தக்காளி -1
- நெய் -1 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
- பருப்பு (சாம்பார் பருப்பு) -3 டேபிள்ஸ்பூன் (பருப்பை ரசம் வைக்கும் (thick) அளவிற்கு வேக வைத்து பருப்பு தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளவும்).
- பச்சை மிளகாய் -2
- சக்கரை -1 டீஸ்பூன்
- உப்பு –தேவையான அளவு
- பெருங்காயம் - சிறிதளவு
- கொத்தமல்லி தழை - சிறிதளவு
Method
Step 1
முதலில்
லெமனை பிழிந்து சாரை எடுத்து வைத்து கொள்ளவும் .பின்பு இஞ்சி மற்றும்
தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.நறுக்கிய பின்பு ஒரு கடாயில் நெய்
ஊற்றி அதில் கடுகு போட்டு தாளிக்கவும்.தாளித்த பின்பு சீரகத்தை போட்டு
தாளிக்கவும்.
Step 2
தாளித்த
பின்பு அதில் பூண்டை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் இஞ்சியை
போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் பச்சை மிளகாய் கீறி போட்டு அத்துடன்
தக்காளியை போட்டு வதக்கவும்.தக்காளி வதங்கிய பின்பு அதில் பருப்பு தண்ணீரை
அதில் ஊற்றவும்.ஊற்றிய பின்பு உப்பு,சக்கரை மற்றும் மஞ்சள் போட்டு
கொதிக்கவிடவும்.
Step 3
கொதி
வந்த பின்பு அதில் பெருங்காயம் மற்றும் எலும்பிச்சை சாரை அதில் ஊற்றி ஒரு
கொதி வரும்போது இறக்கவும்.(குறிப்பு: எலும்பிச்சை சாரை ஊற்றி பின்பு நன்கு
கொதிக்க விட வேண்டாம்).அதில் கொத்தமல்லி தழை போடவும்.இப்போது லெமன் ரசம்
ரெடி.
No comments:
Post a Comment